PARANAE PARAPORULAE KEERTHANAI PP…

பரனே, பரப்பொருளே

Lyrics

பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்ய வாக்கியனே நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே காவில் அதம் ஏவை தேவ கற்பனை மறீனதால் உலகில் மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூரியின் வஞ்சமற வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கி ஆறாக் கொடுந் துயரம் உந்தன் ஆத்துமத்தில் வரலானதுவோ ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு சீடன் பேர் யூதாஸ்காரி யோத்தாம் அவன் பேசினதின்படி காசு பெற்று ஓன்னாரின் கும்புகளை அழைத் தோடிவந்தே உம்மை நாடி வந்தே கன்னத்தில் முத்தமிட்டே உம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தானோ காட்டிக் கொடுத்திடவும் அந்த காதகராகிய பாதகர் கை போட்டே பிடித்திடவும் பின்னும் பொற்கரங் கட்டி இழுத்திடவும் செம்புருவையைப் போலே கூடச்சென்றிடக் காய்பாமுன் நின்றிடவும் அம்பரனே உந்தனுக்கு இந்த ஆபத்துவந்த தென் பாவம் அல்லோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7148
Song ID
paranae-paraporulae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0