Periya Meipare Song பெரிய மேய்ப்பரே Fr.S.J.Berchmans

Fr.S.J.Berchmans

Lyrics

பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே நல்ல மேய்ப்பரே நன்றி ஐயா ஆடுகளை அறிந்திருக்கின்றீர் பெயர்சொல்லி அழைகின்றீர் - உம் முன்பாக நடந்து செல்கின்றீர் சத்தம் கேட்டு பின்செல்கின்றோம் இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா நித்திய ஜீவன் தருகின்றீர் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை ஒருவரும் உம் கரங்களில் இருந்து பறித்துக்கொள்ள முடியாதையா இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா உணவு ஊட்டி மகிழ்கின்றீர் மடியில் வைத்து சுமக்கின்றீர் சிங்கம் கரடி தாக்க வந்தாலும் தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர் இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா உம்மைவிட்டு தூரம் போனாலும் தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர் காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர் தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர் இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8096
Song ID
periya-meipare-song-lyrics-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open