Pithavae Gnanam Anbinaal பிதாவே ஞானம் அன்பினால்

பிதாவே ஞானம் அன்பினால்
Unknown
Lyrics

Lyrics

1. பிதாவே ஞானம் அன்பினால் அனைத்தையும் படைத்தீர்; ஏதேனிலே விவாகத்தால் ஆண் பெண்ணையும் இணைத்தீர் அப்பூர்வ ஆசீர்வாதத்தை, இல்வாழ்க்கையின் நல்லின்பத்தை இவர்களுக்கும் ஈயும். 2. கானா ஊர் விருந்தாளியே, இங்கே ப்ரசன்னமாகும்; உம்தன் சம்பூரணத்தாலே குறைவை நிறைவாக்கும்; இவர்கள் இக இன்பமே பரத்தின் பாக்கியமாகவே நீர் மாறும்படி செய்யும். 3. புனித ஆவி தேவரீர் இவர்கள் மேலே ஊதும்; உம் தூய்மை அன்பினாலும் நீர் இவர்களைத் தற்காரும்; எப்பாவத்துக்கும் நீங்கியே, ஒரே சரீரம் போலவே இவர்கள் வாழச் செய்யும். 4. த்ரியேகா நீர் கட்டாவிடில், ப்ரயாசம் வீணே ஆகும்; நீர் ஆசீர்வதிக்காவிடில் இன்பமும் துன்பமாகும்; உம்மால் இணைக்கப்பட்டோரை குன்றாத நேசமுள்ளோரை யார்தான் பிரிக்கக்கூடும்?

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
825
Song ID
pithavae-gnanam-anbinaal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0