Ponnagar Payanam Pogum Song பொன்னகர் பயணம் போகும்

பொன்னகர் பயணம் போகும்

Lyrics

பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே – மகிமை என்னவென்றுரைக்க வல்லோர் யாருமில்லையே உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ – அவர் தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே – அவர் நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர் – இன்று வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும் – யேசு தன்னுரு வோடே எழுப்பும் சத்தியம் இதே கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில் – சென்றோர் நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார் ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு – புதுப் பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார் கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கிய ரென்று – சொல்லும் உத்தம் வேதத்தின் உண்மை உன்னத மல்லோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7411
Song ID
ponnagar-payanam-pogum
Views
0
Downloads
0