Ponnakar Payanam Pogum பொன்னகர்ப் பயணம் போகும்

பொன்னகர்ப் பயணம் போகும்
Unknown
Lyrics

Lyrics

பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே. 1. உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர் தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. – பொன் 2. லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர் நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. – பொன் 3. வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? – பொன் 4. மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. – பொன் 5. கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில்-சென்றோர் நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார். – பொன் 6. ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு-புதுப் பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார். – பொன் 7. கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கியரென்று-சொல்லும் உத்தம வேதத்தின் உண்மை உன்னத மல்லோ? – பொன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
812
Song ID
ponnakar-payanam-pogum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0