Lyrics
பொன்னும் இல்ல பொருளும் இல்ல
இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில்
இயேசு நாமத்தினால் – 2
சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு
இயேசுவின் நாமத்தினால் – 2
2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
இயேசு நாமத்தினால் – 2
துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே
இயேசுவின் நாமத்தினால் – 2
3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு
இயேசு நாமத்தினால் – 2
சுகம் உண்டு பெலன் உண்டு என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால் – 2
Details
- Numeric ID
- 1894
- Song ID
- ponnum-illa-porulum-illa-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1