PORPU MIGUM KEERTHANAI பொற்பு மிகும் வானுலகும்

பொற்பு மிகும் வானுலகும்

Lyrics

சீயோன் 1 பொற்பு மிகும் வானுலகும் பூவுலகும் படைத்த பரப்பொருளே,-இங்கே பொந்திப்பிலாத் தரண்மனையில் வந்து நிற்கும் காரணமேன், கோவே? கிறிஸ்து கற்பனை மீறிய பாவத்தால் கடின நரகாக்கினைப் படாமல்-உன்னைக் காப்பதற் கிங்கே ஞாய‌ தீர்ப்பில் உற்றோம், சீயோனின் மாதே. சீயோன் 2 துய்ய திரு மேனி எல்லாம் நொய்ய உழுத நிலம்போல ஆகி,-உன்‌ சோரி சிந்த, வாரதினால் நீர் அடிக்கப்பட்டதென்ன, கோவே? கிறிஸ்து வையகத்தின் பாதகத்தால் பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற,-இந்த‌ வாதை எல்லாம் பட்டிறக்க‌, போத மனம் சம்மதித்தோம், மாதே. சீயோன் 3 செய்ய கண்கள் உறச் சிவந்து, திருக் கன்னங்கள் தடித்து, மிக வீங்கி,-முழுச் சென்னியின் ரோமங்கள் எல்லாம் வின்னமுற்றிங் கிருப்பதென்ன, கோவே? கிறிஸ்து மையிருளில் குருக்களுடை மாளிகையில் படுத்தின பாடெல்லாம்-இங்கே வன் கொலைஞரால் அடிக்க‌, பங்கமுற்ற கோலம் இது, மாதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7147
Song ID
porpu-migum-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0