Posanam Unndo போசனந்தா னுமுண்…

போசனந்தா னுமுண்டோ திருராப்
Unknown
Lyrics

Lyrics

போசனந்தா னுமுண்டோ திருராப் போசனம் போலுலகில்? ராசரும் வையக நீசரும் அம்பரன் நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் போசனம் 1. கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்; கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம்; பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்; பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம். போசனம் 2. பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்; பொன் வானதூதரும் உண்ணாத போசனம்; ஓர் காலமும் குறைவாகாத போசனம்; ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம். போசனம் 3. பஸ்காப் பலியின்பொருள் என்னும் போசனம்; பாவி புசிக்கும் சமாதான போசனம்; நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்; நின்மலன் தந்திடும் அற்புதப் போசனம். போசனம் 4. மாமலைப் பீடப் பலியான போசனம்; மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்; ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்; அத்தனார் மெய்மொழியாலான போசனம். போசனம் 5. மாமிசம் அப்பத்தோடே வரும் போசனம்; வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்; பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்; பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம். போசனம் 6. ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்; ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்; தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்; சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம். போசனம் 7. செத்தும் உயிரோ டெழும்பிடும் போசனம்; சீவனோ டென்றென்றும் வாழ்விக்கும் போசனம்; நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்; நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம். போசனம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
808
Song ID
posanam-unndo-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0