Potri Potri Thudithiduvom போற்றி போற்றி துதித்திடுவோம்
போற்றி போற்றி துதித்திடுவோம்
Lyrics
போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவை
பாடிப் பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை
ஆனந்தமாய் அவரை நாடி
அல்லேலூயா பாட்டுப் பாடி
ஆராதனை செய்திடுவோம் இயேசுவை
1. புல்லுள்ள இடத்தில் மேய்ச்சல் தந்தார்
அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு விட்டார்
குறைவில்லாத வாழ்வை வாழச் செய்தார்
யேகோவா யீரே யீரே என்றே பாடுவேன்
2. ஆத்துமாவில் ஆறுதலைத் தந்தார்
நீதியிலே வழிநடக்கச் செய்தார்
மரண இருளில் உடனிருந்து மீட்டார்
யேகோவா ராப்பா ராப்பா என்றே பாடுவேன்
3. கோலும் தடியும் கொண்டு தேற்றி வந்தார்
சத்துருக்கள் கண் முன் விருந்தளித்தார்
இராஜரீக அபிஷகமும் தந்தார்
யேகோவா நிசி நிசி என்றே பாடுவேன்
4. பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்தார்
நன்மை கிருபை தொடர்ந்து வரச் செய்தார்
பரலோகத்தின் நிச்சயத்தைத் தந்தார்
யேகோவா ரூவா ரூவா என்றே பாடுவேன்
Details
- Numeric ID
- 733
- Song ID
- potri-potri-thudithiduvom-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0