Lyrics
புத்தம் புதிய ஆண்டு புத்தம் புதியநாள்
கிருபையால் தேவன் தந்தது -2
இந்த கிருபைதான் இதுவரை நடத்தியது
தேவ கிருபைதான் இனியும் நடத்திடுமே
1.கடுகளவும் குறைவின்றி காத்து பார்த்து வந்தீர்
கண்ணீரின் பாதையில் கண்மணி போல் காத்தீர் -2
இதுவரை நடத்தினீர்,இனியும் நடத்திடுவீர்
இதுவரை சுமந்திட்டீர் இனியும் சுமந்திடுவீர்-புத்தம்
2.வருசத்தை நன்மையினால் முடிசூட்டுபவரே
வல்லமையால் வரங்களினால் நிரப்பியே அனுப்பிடுமே 2
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை நிரப்பினீர் இனியும் நிரப்பிடுவீர்
3.வாக்குறைத்து வழுவாமல் இதுவரை வனைந்தீரே
வார்த்தையினால் வசனத்தால் வாழவைத்தீரே -2
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை தாங்கினீர் இனியும் தாங்கிடுவீர்
4.புல்லுள்ள இடங்களிலே நிறைவாய் போஷித்தீரே
புதுகிருபை புதுபெலத்தால் புதுமையாய் நிறுத்திடுமே- 2
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை போஷித்தீர் இனியும் போஷிப்பீர்
Details
- Numeric ID
- 481
- Song ID
- putham-puthiya-aandu-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1