Puthu Paadalaal Punniyarai புதுப்பாடலால் புண்ணியரை

புதுப்பாடலால் புண்ணியரை
Unknown
Lyrics

Lyrics

புதுப்பாடலால் புண்ணியரை போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன் (பத்து) நரம்பு வீணை மீட்டி மீட்டி நடனமாடியே மகிழ்ந்திடுவேன் அற்புதமே அவர் நாமம் அதிசயமே அவர் நாளும் – 2 அல்லேலூயா அவர் கீதம் – 2 1.தாயின் மேலாய் நேசித்தாரே தந்தையைப் போல் போஷித்தாரே – 2 (என்றும்) தேவ அன்பால் நிறைந்து நானும் தேவாதி தேவனைத் துதித்திடுவேன் – அற்புதமே 2.நெரிந்த நாணல் முறிந்திடாமல் மங்கிய திரியை அணைத்திடாமல் (தூய) எண்ணெய் ஊற்றி என்னை மாற்று புதிதான அபிஷேகம் தந்திட்டாரே – அற்புதமே 3.சீக்கிரமாய் வந்திடுவார் கண்டிடுவேன் நான் களித்திடுவேன் (அவர்) நேச மார்பில் சாய்ந்து என்றும் ஒளிமய தேசத்தில் சுகித்திருப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3917
Song ID
puthu-paadalaal-punniyarai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0