Ratchikka Vandhavare இரட்சிக்க வந்தவரே

இரட்சிக்க வந்தவரே

Lyrics

நமக்கொரு பாலகன் பிறந்தாரே நம்மை இரட்சிக்க வந்தவரே (2) கர்த்தத்துவம் அவர் தோளின்மேலே இம்மானுவேல் தேவன் நம்மோடே(2) இயேசு அவர் நாமம் அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமையுள்ளவரே (2) கர்த்தத்துவம் அவர் தோளின்மேலே இம்மானுவேல் தேவன் நம்மோடே(2) 1. தமது சாயலில் மனிதனைப் படைத்து தேவன் உறவாடி மகிழ்ந்தாரையா பாவத்தில் விழுந்து பாதையை இழந்து மனிதன் இருளில் கிடந்தானையா(2) தகப்பன் தயவாய் நம்மேல் அன்பாய் மகனையும் பாராமல் கொடுத்தரையா நம்மை மீட்க அருகில் சேர்க்க மன்னன் கிறிஸ்து தம்மை தந்தாரையா (2) தன்னானே தன்னானே தன்னானானே ஏலேலோ ஏலேலோ ஏலேலேலோ(2) தன்னானனனே ஏ தன்னானனனே ஏலேலோ ஏலேலோ தன்னானே ஏலேலேலேலோ 2. நேற்றொரு பேச்சு இன்றொரு பேச்சு மனிதர்கள் மாறிப்போவாரையா நேற்றும் இன்றும் என்றும் மாறா உண்மையுள்ளவர் அவர்தானய்யா(2) அவரை நோக்கிக் கூப்பிடு இன்று நெருங்கி உடன் பதிலளிப்பாரையா கர்த்தரின் வாக்கு மாறிடாதே இன்றும் என்றும் உன்னை காப்பாரையா (2) நமக்கொரு பாலகன் பிறந்தாரே இயேசு அவர் நாமம் நம்மை இரட்சிக்க வந்தவரே அதிசயமானவரே நமக்கொரு பாலகன் பிறந்தாரே ஆலோசனைக் கர்த்தரே நம்மை இரட்சிக்க வந்தவரே வல்லமையுள்ளவரே கர்த்தத்துவம் அவர் தோளின்மேலே இம்மானுவேல் தேவன் நம்மோடே தன்னானே தன்னானே தன்னானானே ஏலேலோ ஏலேலோ ஏலேலேலோ (2) தன்னானனனே ஏ தன்னானனனே ஏலேலோ ஏலேலோ தன்னானே ஏலேலேலேலோ ராஜாதி ராஜா மஹாராஜா இயேசு பிறந்தாரே! உன்னதத்தில் தேவனுக்கு மகிமையும் உண்டாகவே! பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாக உண்டாக மன்னன் இயேசு வந்தாரே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5327
Song ID
ratchikka-vandhavare-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
4
Source
Open