Iraththathinaalae Kaluvapattaen இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
Lyrics
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன் – 2
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று – நான் – 2
இரத்தம் ஜெயம் , இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் – 2
1. படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார்
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் – 2
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா – 2
2. என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம் – 2
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம் – 2
3. போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தம் – 2
தீய ஆவி(யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது-எந்த – 2
4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
வாழ்நாளெல்லாம் தினமும் – 2
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும் – 2
5. சாவுக்கேதுவான கிரியை நீக்கி
பரிசுத்தமாக்கும் இரத்தம் – 2
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு – 2
Details
- Numeric ID
- 6778
- Song ID
- rathathinaalae-kazhuvappatten
- Views
- 0
- Downloads
- 0