Santhosamai Sangeetham Paaduvom சந்தோசமாய் சங்கீதம் பாடுவோம்
சந்தோசமாய் சங்கீதம் பாடுவோம்
Lyrics
சந்தோசமாய் சங்கீதம் பாடுவோம்
ஜீவன் தந்த நல்மேய்ப்பனை
பாடிடுவோம் மகிந்தாடிடுவோம்
மீட்க வந்த இயேசு ராஜனை
1. எக்காளத்தோடும் கைத்தாளத்தோடும்
ஏகமாய் துதித்திடுவோம்
மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
வல்லவரை வாழ்த்திடுவோம்
2. உன்னதத்திலும் பூலோகத்திலும்
உன்னதரைப் போற்றிடுவோம்
சர்வத்தில் வல்லமை உடையவரை
ஸ்வரங்களால் கீர்த்தனம் செய்வோம்
3. தம்புருவோடும் நடனத்தோடும்
வீணையோடும் வாழ்த்திடுவோம்
வனைந்திடும் குயவனாம் கர்த்தரையே
பணிவுடன் தொழுதிடுவோம்
4. பர்வதங்களே பெருங்காற்றே
துதியுடன் கொண்டாடுங்கள்
நதிகளும் கைகொட்டி ஓடிடுமே – நம்
நாயகனை போற்றிடவே
Details
- Numeric ID
- 4650
- Song ID
- santhosamai-sangeetham-paaduvom-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open