Santhosame Santhosame Yesuvin சந்தோசமே சந்தோசமே இயேசுவின்

சந்தோசமே சந்தோசமே இயேசுவின்
PPT
Lyrics

Lyrics

சந்தோசமே சந்தோசமே சந்தோசமே சந்தோசமே இயேசுவின்தானே இங்குபோல சந்தோசமே எங்குமில்லையே 1. இயேசுவோடு பேசுவதே நமக்கு சந்தோஷம் இயேசுவோடு இருப்பதுவே நமக்கு சந்தோஷம் அவரும் நம்மில் நாமும் அவரில் இருந்துவிட்டாலே வாழ்க்கை முழுதும் சந்தோசமே இன்பமயமே 2. பரிசுத்தமாய் வாழ்வதுமே நமக்கு சந்தோஷம் பாவமில்லா வாழ்க்கைய நமக்கு சந்தோஷம் இயேசுவுக்கு பிரியமாக வாழ்வது தானே உண்மையான நிலையான பெரிய சந்தோஷம் 3. இயேசுவையே துதிப்பதுவே நமக்கு சந்தோசம் தேவனையே உயர்த்துவதே நமக்கு சந்தோஷம் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பதே பரலோக தெய்வீக இன்பசந்தோஷம் 4. வேதத்தையே ருசிப்பதுவே நமக்கு சந்தோஷம் இராப்பகலாய் தியானிப்பதே நமக்கு சந்தோஷம் – அது சொன்னபடி நாம் என்றும் வாழ்ந்துவிட்டாலே வாழ்க்கையிலே துன்பமில்லை சந்தோசந்தானே 5. இயேசுவின் இரத்ததாலே கழுவப்பட்டோமே அழியாத இரட்சிப்பை பெற்றுக்கொண்டோம் உலகில் ஏதும் இருந்தாலும் இல்லா விட்டாலும் பரலோகில் இடமுண்டு போதும் போதுமே 6. உலகம் தரும் சந்தோசமே எல்லாம் மாயையே அதினாலே வேதனையும் துன்பமும் தானே யாராலும் தந்திடாத என்றும் அழியா சந்தோஷம் சமாதானம் இயேசு தந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5477
Song ID
santhosame-santhosame-yesuvin-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open