Saranam Nambinaen Yesu Song

Lyrics

சரணம் நம்பினேன் யேசு நாதா இது தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா நின் அருளால் இங்கே வந்து-என்றும் நின் அடைக்கலமாக என்னையே தந்து முன்னாள் வினையைத் துறந்து ஆதி மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று சன்னதி முன் தொண்டன் நின்றே -என்றும் தாயான கருணை உனக்கு உண்டென்றே சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச் சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே அலைவாய்த் துரும்புபோல் ஆடி -உன ததி கருணை வரச் செம்பாதந் தேடித் தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின் தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி இனிய கருணை பொழிவேதா-எனை இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா கனி வினை நீக்கிய நீதா-நசரைக் கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5932
Song ID
saranam-nambinaen-yesu
Views
1
Downloads
1