Saranam Nambinaen Yesu

சரணம் நம்பினேன் யேசு நாதா
Unknown
Lyrics

Lyrics

சரணம் நம்பினேன் யேசு நாதா இது தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா நின் அருளால் இங்கே வந்து என்றும் நின் அடைக்கலமாக என்னையே தந்து முன்னாள் வினையைத் துறந்து ஆதி மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று சன்னதி முன் தொண்டன் நின்றே என்றும் தாயான கருணை உனக்கு உண்டென்றே சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச் சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே அலைவாய்த் துரும்புபோல் ஆடி உன ததி கருணை வரச் செம்பாதந் தேடித் தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின் தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி இனிய கருணை பொழிவேதா எனை இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா கனி வினை நீக்கிய நீதா நசரைக் கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3565
Song ID
saranam-nambinaen-yesu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0