Saruvaesuvara சருவேசுரா ஏழைப்ப…

சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே

Lyrics

சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே தயவாய் இரும் சுவாமி திரியேக பரதேவா நெறி மேவும் ஒரு யோவா சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய் நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய் இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும் எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும் தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும் தண்டியாமல் பொறுத்தீர் நீர் யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென் நன்றி கேட்டை மறுத்தீர் ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன் மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன் நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல் நீதி வழியைக் கடந்தேன் கெட்ட வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின் மனதுக்கேற்க நடந்தேன் பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும் தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1109
Song ID
saruvaesuvara-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open