Saththam Keattu Siththam சத்தம் கேட்டு சித்தம் செய்ய

சத்தம் கேட்டு சித்தம் செய்ய
Unknown
Lyrics

Lyrics

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே – இயேசு சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது (ஆ ஆ) கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய் வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே (2) 1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ ஆ அதை கடை பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும் கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் 2. தேவை அதிகம் ஏராளம் ஆ ஏராளம் ஏராளமே குஜராத் பீகார் யூபியில் ஏராளம் ஏராளமே இராஜஸ்தான், எம்பி, ஒரிஸாவில் நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார் 3. உலக மாமிசப் பிடியினின்றும் ஆ பிசாசின் தந்திர வலையினுன்றும் விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம் உப்பைப் போல கரைந்து விடு மெழுகைப் போல உருகி விடு 4. வெற்றியே தரும் ஆண்டவருக்கு ஆ காணிக்கை காணிக்கையே உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கை காணிக்கையே தேசம் இயேசுவைக் கண்டுவிடும் சபைகள் ஏராளம் பெருகிவிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2700
Song ID
saththam-keattu-siththam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0