Seer Thiree Yega Vasthe சீர்திரியேக வஸ்தே, நமோ
சீர்திரியேக வஸ்தே, நமோ
Lyrics
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !
பார்படைத்தாளும் நாதா
பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ !
1. தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத்
தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ !
சொந்தக் குமாரன் தந்தாய்
சொல்லரும் நலமீந்தாய்
எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ
2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற
எவரும் நின் புகழ்கூற
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ !
3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட
பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ !
ஆகமங்கள் புகழ் தேவா நமோ நமோ !
வாகு தங்கு குருநாதா, நமோ நமோ !
சருவ லோகாதிபா, நமஸ்காரம் !
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம் !
Details
- Numeric ID
- 6706
- Song ID
- seer-thiree-yega-vasthe-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0