Seeresu Baalan Jeyamanu Velan சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

Lyrics

சீரேசு பாலன் ஜெயமனு வேலன் சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன், தாராள மாகத் தாமே மனுவான. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக மண்ணி லேகின மாட்சிமை யாலே, விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை இந்நிலத்தினில் எழில்சமா தானம், மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? பாவப் பிணியாலே பாதகரைப் போலே சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே, கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க தீபமாய் வந்த தேவமைந்தனான நித்தனே, என் பாவம் எத்தனையானாலும் சித்தம் உருகிச் சீர்கூற வேணும், அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்; பத்தியாய் உனைப் பகருவேன் எப்போதும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1124
Song ID
seeresubaalan-jeyamanuvelan-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
6
Downloads
0
Source
Open