Seeyonae Seeyonae சீயோனே சீயோனே

சீயோனே சீயோனே
Unknown
Lyrics

Lyrics

சீயோனே சீயோனே உன் வல்லமையை இன்று தரித்துக் கொள் உம் நேசர் வருகிறார் வருகிறார் வருகிறார் (2) வருவேன் என்றவர் தாமதியாரே வந்திடும் நேரம் நெருங்கிடுதே கறை திரை இல்லாத மணவாட்டியாய் நிறைவாய் இயேசுவை சந்தித்திடுவோம் -சீயோனே நிந்தை சுமந்த பக்தருக்காய் நீதியின் சூரியன் தோன்றிடுவார் ஜெய கீதம் பாடி சுத்தர் அன்று ஜெய கெம்பீரமாய் பறந்திடுவோம் -சீயோனே பரமனின் சேவை செய்திடுவோம் பலன் களை அன்று பெற்றிடுவோம் மகிமையின் பிரகாச பாத்திரமாய் மன்னவர் பணியினை செய்திடுவோம் -சீயோனே நீதியின் சால்வையை தரித்திடுவோம் நித்திய சேவையில் விரைந்திடுவோம் இரட்சிப்பின் ஆடை அலங்காரமாய் இயேசுவின் கரத்தில் திகழ்ந்திடுவோம் -சீயோனே அல்லேலூயா பாடிடும் பரமனின் சேனை ஆர்ப்பரிப்போடு முன் சென்றிடும் பரமனின் முகம் காணும் நாளதிலே மகிமையின் சாயலை அணிந்திடுவோம் -சீயோனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1501
Song ID
seeyonae-seeyonae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0