Seeyonin Mangala சீயோனின் மங்களப் பாடல்களை

சீயோனின் மங்களப் பாடல்களை

Lyrics

சீயோனின் மங்களப் பாடல்களை சீரேசு நாதனுக்கு பாடிடுவோம் நன்றியோடும் துதியோடும் கெம்பீரமாய் பாடிடுவோம் 1. பூரண வடிவுள்ள சீயோனிலே மகிமையின் தேவன் பிரகாசிப்பார் குறித்திட்ட காலம் வந்திட்டதே சீயோனிலே தேவன் வெளிப்படுவார் 2. சீயோனின் நடுவில் நம் தேவன் என்றென்றும் பெரியவராய் இருப்பார் ஆக்கினை எல்லாம் அகற்றிவிட்டார் சியோனில் தேவன் கெம்பீரிப்பார் 3. சியோனின் கறைகளை நீக்கிடுவார் மகிமையின் சபையாய் மாற்றிடுவார். சேனையின் திரளாய் பெருகச் செய்வார் சீயோனில் தேவன் உயர்ந்திருப்பார் 4. சீயோனில் வேதம் வெளிப்படுமே கர்த்தரின் வசனம் உயர்ந்திடுமே பூமியின் சகல ஜாதிகளும் சீயோனில் தேவனை கண்டிடுவார் 5. சியோனின் வல்லமை பெருகிடுமே சாத்தானின் சேனைகள் சிதறிடுமே தடைகள் யாவும் நீங்கிடுமே சீயோனை மகிமை சூழ்ந்திடுமே 6. சியோனின் தேவன் மகிமையோடே அதிவிரைவாக வந்திடுவார் மாட்சிமை நிறைந்த ராஜ்ஜியத்தில் சீயோனை தேவன் சேர்த்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1116
Song ID
seeyonin-mangala-song-lyrics-chords-ppt-pas-reegan-gomez
Views
10
Downloads
3
Source
Open