Senaikalin Karththar Mun Selkintar சேனைகளின் கர்த்தர் முன் செல்கிறா
சேனைகளின் கர்த்தர் முன் செல்கிறா
Lyrics
சேனைகளின் கர்த்தர் முன் செல்கிறா
ர் அவருடன் நாமும் பின் செல்லுவோம்
எதற்கும் பயம் இல்லையே
என்றும் ஜெயம் நமக்கே -2
ஆமென் அல்லேலூயா (2) ஆமென்
1. அநியாயம் செய்பவன் செய்யட்டும்
அசுத்தமாய் வாழ்பவன் வாழட்டும்
நீதி செய்பவன் செய்யட்டும்
தூய்மையாய் வாழ்பவன் வாழட்டும்
இதோ அவனவனுக்கு அவரளிக்கும் பலன்
அவருடன் வருகின்றதே -2
2. தேசங்கள் எழுப்புதல் அடைய
எழுந்து வா அவர் பின் செல்வோம்
அறுவடை மிகுதியாய் இருப்பதால்
ஆண்டவர் சேவைக்கு அழைக்கிறார்
இதோ, நாட்களை வீணாய் கடத்தினால்
வருந்திடுவோமே நாம்
3. ஐசுவரியம் ஆசி எல்லாமே
நம் ஆண்டவர் நமக்காய் தந்தாரே
அதனால் தேவனின் ராஜ்யம்
வளமாய் உயர்த்தி மகிழ்வோம்
இதோ சீக்கிரம் வரப்போகும் ராஜாவும்
ஆயத்தமாகிடுவோம்
Details
- Numeric ID
- 7260
- Song ID
- senaikalin-karththar-mun-selkintar-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open