Setrilirunthean சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன்

சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் அவர் என்றும் வாழ்க(3) அவர் என்றென்றும் வாழ்க 1. இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன் நீ வாழப் பிறந்தவன் என்று சொன்னாரே நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன் பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே 2. இருளைக் கண்டு நான் பயந்திருந்தேன் நடுப் பகலின் சூரியனாய் மாற்றினாரே தரித்திர பாதையில் நான் இருந்தேன் என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே 3. மரணத்தின் பாதையில் நடந்திருந்தேன் என்னை ஜீவ பாதையில் நடத்தி சென்றாரே எதிர்காலம் குறித்து நான் பயந்திருந்தேன் எதிர்பாரா வாழ்க்கையை எனக்கு தந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7259
Song ID
setrilirunthean-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
1
Source
Open