Siluvai Maraththil சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு

சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு
Unknown
Lyrics

Lyrics

சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் - 2 நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார் நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார் - 2 1 பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்றறியாரே* - 2 என்றவர் கதறல் ஓசையில் மன்னிப்பின் தொனி ஒலிக்கின்றதே - 2 சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் 2 இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்* என்றாரே - 2 இரட்சிப்பின் குரல் கேட்குதே இரட்சகரை இன்றே சேர்ந்திடுவோம் - 2 3 ஸ்திரீயே அதோ உன் மகன் அதோ உன் தாய்* என்ற நல் நேசரவர் - 2 பொங்கிடும் அன்பு பார்வையுடன் பொறுப்பினை தந்து தொங்குகின்றார் - 4 தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்* என்றவர் கதறுகிறார் - 2 அங்கம் சிதைந்த ஆண்டவர் அங்கலாய்ப்பின் ஓசை எழுப்புகின்றார் - 2 5 தாகம் தீர்க்கும் கன்மலையவர் இன்று தாகமாயிருக்கிறேன் என்றார் - ஆத்தும தாகம் கொண்டவர் தவிப்புடன் நம்மை அழைக்கிறாரே - 2 6 தந்தையின் சித்தமே செய்து முடிக்க மண்ணில் வந்தவர் அனைத்தும் செய்து முடித்தார் - 2 முடிந்தது என்ற வார்த்தையில் முழுமையாய் அவர் வெற்றி சிறந்தார் - 2 7 பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்* என்றே - 2 ஜீவன் தந்த இயேசுவின் அர்ப்பணிப்பின் சத்தம் அழைக்கின்றதே - 2 சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் - 2 நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார் நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார் - 2 Transcript

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2691
Song ID
siluvai-maraththil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0