Siluvai Meethey Thongiya Yesu சிலுவை மீதே தொங்கிய இயேசு
சிலுவை மீதே தொங்கிய இயேசு
Lyrics
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே – 2
1. சுகந்த வாசனை பலியாய் தம்மை
உவந்து ஜீவன் தந்தார் – 2
என்னில் அன்பு கூர்ந்ததாலே
என்னை அவருக்கே அர்ப்பணித்தேன் – 2
2. எம்மில் அன்பு கூர்ந்ததாலே
தம்மை தியாகம் செய்தார் – 2
அவருடன் நான் அறையுண்டேனே
அவரே என்னில் ஜீவிக்கின்றார் – 2
3. முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
அடிமை வாழ்வடைய – 2
அவரின் வருகை நாளில் நானும்
அவரைப் போல மாறிடுவேன் – 2
4. கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
பிரிக்க யாரால் கூடும் – 2
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் – 2
5. அறிவுக்கெட்டா நேசர் அன்பில்
அகலம் ஆழமுண்டோ – 2
பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்
சபையில் மகிமை செலுத்திடுவோம் – 2
Details
- Numeric ID
- 3544
- Song ID
- siluvai-meethey-thongiya-yesu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0