Sinthanai Paadaathae சிந்தனைப் படாதே நெஞ்சமே உனை ரட்சித்த

சிந்தனைப் படாதே நெஞ்சமே உனை ரட்சித்த

Lyrics

சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார். அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன? எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே. 1. ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும் அங்கதில் ஓன் றும் தரையி லேவிழாதென் றுத்தமன் உரைத்திருக்க, புந்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல, சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று. 2. சோங்கில்அயர் சீடரின்முன் பாங்குடன் தயவளித்துத் தூங்கினோர் உனையும் வந்து தாங்குவார், என வந்தாலும்; ஓங்கும் இஸ்றாவேல் ராசன் தூங்கவும் இலையே; சும்மா ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று 3. எத்திசையினும் அடர்ந்த சத்துரு எல்லாம் ஜெயம்கொண்டு அத்தனின் வலத்தில் நித்திய துத்தியத் திருந் தரசாள் கர்த்தனாம் கிறிஸ்து நாதர் சித்தம தல்லாமல் வீணில் தத்தி விழுந் தென்ன வரும்? பித்தது பித்தது கொண்டு.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1107
Song ID
sinthanai-paadaathae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
6
Downloads
0
Source
Open