Sitham சித்தம் உம் சித்தம்

சித்தம் உம் சித்தம்

Lyrics

சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும் மாறாது மாற்றமேயில்லை அது மாறுவதில்ல சத்தம் உம் சத்தம் உம் சித்தத்தை நினைப்பூட்ட மறப்பதேயில்ல அது மறந்ததில்லை-2 நான் போகும் பாதைகள் முரண்பாடாயிருந்தாலும் இலக்கிற்கு தடையே இல்ல திட்டத்தின் மையத்தில் நீர் என்னை வைத்ததால் சறுக்கில்லை முன்னே செல்ல-சித்தம் 1.யாக்கோபைப்போல எத்தனாக வாழ்ந்ததும் யோசேப்பை போல குழியிலே வீழ்ந்ததும்-2 வாழ்ந்தவர் வீழ்ந்தாலும் கையில் எடுப்பீர் வீழ்ந்தவர் வாழ்ந்ததாக மாற்றி அமைப்பீர் திட்டம் வைத்தீரே என்னை இஸ்ரவேலாய் மாற்றிட சித்தம் கொண்டீரே என்னை அரியணையில் ஏற்றிட உமது திட்டங்கள் தோற்பதில்லை-சித்தம் 2.மோசேயைப்போல எகிப்திலே இருந்ததும் தானியேலைப்போல பாபிலோனில் வளர்ந்ததும்-2 வளர்ந்ததின் காரணம் அறிந்து கொண்டேன் வளர்த்தவர் யாரென்றும் புரிந்து கொண்டேன் திட்டம் வைத்தீரே என்னால் இஸ்ரவேலை மீட்டிட சித்தம் கொண்டீரே என்னால் உம் நாமம் உயர்ந்திட உமது தரிசனங்கள் தோற்பதில்லை-சித்தம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
658
Song ID
sitham-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1