Siyon Desathil Naan Magiznthirunthu சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்து
சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்து
Lyrics
சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்திருந்து
சேனைகளின் கர்த்தரோடு வாழ்ந்திருப்பேன் - 2
கவலையில்லை அங்கு கண்ணீர் இல்லை
வருத்தமும் பசியும் அங்கு இல்லை
ஆட்டுக்குட்டியானவர் என்னை மேய்த்து
ஜீவ தண்ணீர் ஊற்றண்டையில் நடத்திடுவார்
மரணமில்லை அங்கு துக்கமில்லை
அலறுதல் சத்தமும் அங்கு இல்லை
கர்த்தர் இயேசு எந்தன் கண்ணீர் துடைத்து
ஜீவ விருட்சம் கனி தந்து நடத்திடுவார்
பாவமில்லை அங்கு சாபமில்லை
சூரியன் சந்திரன் அங்கு இல்லை
ஆட்டுகுட்டியானவர் வெளிச்சத்திலே
ஆடி பாடி என்று மகிழ்ந்திருப்பேன்
Details
- Numeric ID
- 4703
- Song ID
- siyon-desathil-naan-magiznthirunthu-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open