Snegame Snegame சிநேகமே சிநேகமே இறங்கியே வாருமே

சிநேகமே சிநேகமே இறங்கியே வாருமே
Unknown
PPT
Lyrics

Lyrics

சிநேகமே சிநேகமே இறங்கியே வாருமே சிநேகத்தின் இலக்கணம் இயேசுவே நீர் தானே சிநேகமே சிநேகமே என்னைத் தேடி வந்தீரே சிநேகத்தின் இலக்கணம் உந்தன் அன்பு போதுமே கொல்கதா மேட்டினிலே கனத்திடும் சிலுவைதனை உம்மேல் ஏற்றுக் கொண்டீரே - 2 என் பாரம் தானே, என் பாவ சேற்றினால் - 2 எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே சிநேகத்தின் இலக்கணம் நீரே - 2 பாவியாயிருக்கையிலே எனக்காக மரித்ததினால் உம் அன்பை விளங்கச் செய்தீரே - 2 என் பாவம் நீங்க நீர் பாவமானீரே - 2 எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே சிநேகத்தின் இலக்கணம் நீரே - 2 எருசலேம் வீதியிலே எதிரிகள் மத்தியிலே பரியாசமாய் போனீரே -2 என் சாபம் நீங்க நீர் சாபமானீரே - 2 எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே சிநேகத்தின் இலக்கணம் நீரே - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6976
Song ID
snegame-snegame-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open