SOLARUM MEINIYAANARAE KEERTHANAI SONG TAMIL CHRISTIAN KEERTHANAI SONG
Lyrics
சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே.-உரை
வல்லறஞ் சிறந்து மனுவானாரே,-உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே,-உரை
மாடாயர் தேடும் வஸ்துபகாரி,-மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே,-அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே,-உரை
அச்சய சவுந்தர அசரீரி,-அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா,-ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா,-உரை
பாவ வினை யாவையுந் தீர்த்தாரே,-உயர்
தேவ குலமாய் எமைச் சேர்த்தாரே;
பக்கிஷத்தால் முகம் பார்த்தாரே,-பெரும்
பொக்கிஷம் போல் எமைச் சேர்த்தாரே,-உரை
Details
- Numeric ID
- 6709
- Song ID
- solarum-meiniyaanarae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0