Soththiram Soththiramey ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு ஸ்வாமிக்கு ஸ்தோத்திரமே தோஷி என்னை இரட்சித்த பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே 2.கோடா கோடி தூதர்கள் சபை கூடி நடனமாடி பாடி உம்மைத் துதிக்க- அடியானும் உம்மைத் துதிப்பேன் 3.கன்னியர் கீதம்பாடி இயேசு மன்னவனையே போற்றி உன்னி யும்மைத் துதிக்க- அடியானும் உம்மைத் துதிப்பேன் 4.பரிசுத்தவான்கள் சங்கம் எங்கள் பார்த்திபன் இயேசுவையே பாடி உம்மைத் துதிக்க – அடியானும் உம்மைத் துதிப்பேன் 5.மூப்பர்கள் சுற்றி நின்று எங்கள் முன்னவன் இயேசுவையே ஆர்ப்பரித்து துதிக்க – அடியானும் உம்மைத் துதிப்பேன் 6.பூமியின் தாவரங்கள் புஷ்பம் பூத்துத் துளிர் மலர்ந்து நாதா உம்மைத் துதிக்க – அடியானும் உம்மைத் துதிப்பேன் 7.தாழ்த்தித் தலைகுனிந்து – ரத்த சாட்சிகள் கூட்டமெல்லாம் வாழ்த்தி உம்மைத் துதிக்க – அடியானும் உம்மைத் துதிப்பேன் 8.ஆயிரம் நாவிருந்தால் – அன்பரைப் பாடியே ஸ்தோத்தரிப்பேன் ஆவியில் நான் நிறைந்து – எந்தன் அண்ணலிடம் சொல்லுவேன் 9.கேரூபின் சேராபீன்கள் – உடல் செட்டைகளால் மூடி நேராய் உம்மைத் துதிக்க – நீசன் யானும் உம்மைத் துதிப்பேன் 10.வானத்தின் ஜோதி எல்லாம் தேவ மைந்தனையே போற்றி ஞாலத்திலே துதிக்கப் பாவியானும் உம்மைத் துதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5729
Song ID
soththiram-soththiramey-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open