Sthothiram Paadiye Potriduven ஸ்தோத்திரம் பாடியே

ஸ்தோத்திரம் பாடியே
Unknown
Lyrics

Lyrics

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை ராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன் 1. அற்புதமான அன்பே – என்னில் பொற்பரன் பாராட்டும் தூய அன்பே என்றும் மாறா தேவ அன்பே என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம் 2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில் ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே தியாகமான தேவ அன்பே திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம் 3. மாய உலக அன்பை – நம்பி மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே என்னை வென்ற தேவ அன்பே என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம் 4. ஆதரவான அன்பே – நித்தம் அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே உன்னத மா தேவ அன்பே உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம் 5. வாக்கு மாறாத அன்பே – திரு வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே சர்வ வல்ல தேவ அன்பே சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4370
Song ID
sthothiram-paadiye-potriduven-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0