Sugam Vanthathu சுகம் வந்தது வந்தது மண்ணுலகில்
சுகம் வந்தது வந்தது மண்ணுலகில்
Lyrics
சுகம் வந்தது வந்தது மண்ணுலகில்
சுடர் தந்தது தந்தது பொன்னுலகில்
நிரந்தர இன்பம் தந்தவரே
இறைவனின் வடிவம் இயேசு நாதரே
அல்லேலூயா நாமம் பாடி
காற்று எங்கும் வீசட்டும்
அன்பு பண்பு பாசம் பொங்கி
தேவன் நம்மை ஆளட்டும்
எல்லோரும் அவர் புகழ் பாடுங்கள்
எந்நாளும் அவரையே தேடுங்கள்
எங்கும் எங்கும் உம் இராஜங்கம்
எங்கும் இன்பம் இன்பம் நீர் தாராயோ
இனிமை சுரக்கும் இதயம் மணக்கும்
மேசியா இராஜா கீதம் நிதம் பாடுவோம்
கதவு திறக்கும் கருணை பிறக்கும்
இயேசையா ஞான கீதம் நிதம் காணுவோம்
தேவ மைந்தன் இயேசுவை
தேசம் எங்கும் போற்றவே
பாரம் எல்லாம் சுமப்பவர்
பாவம் எல்லாம் தீரவே
புது வெள்ளி வான்பிறை தொட்டில்
அது அன்பின் தாமரை மொட்டில்
வரும் பாலகனை மரி பாலகனை
என்றும் பணிந்திடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5042
- Song ID
- sugam-vanthathu-lyrics-song-chords-ppt
- Views
- 20
- Downloads
- 1