Sundhara Parama Deva Mainthan Yesu

சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு

Lyrics

சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத் தோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும்! அந்தரம் புவியும் தந்து , சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார், அருள் முடி சூட்டினார், கிருபையால் தேற்றினாரே, துதி 1.பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே; வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே, கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள் – பவத்துயர் போடுங்கள் – ஜெயத்தைக் கொண்டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும் 2.விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும் விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே , மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும் வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே, அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்டாடிட – அவர் பதம் தேடிட – வெகு திரள் கூடிடத் துதிபுகழ் பாடிடப் பாடிட என்றும் 3.சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும் சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே, எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும் ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே, உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும், உயர்ந்து – வாழ, தீயோன் பயந்து – தாழ, மிக நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும் – சுந்தர

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6398
Song ID
sundara-parama-deva
Views
0
Downloads
0