Thaalvilirunthu Koopidum Song பாமாலை: 289 தாழ்விலிருந்து கூப்பிடும்

தாழ்விலிருந்து கூப்பிடும்

Lyrics

1.தாழ்விலிருந்து கூப்பிடும் என் சத்தங் கேட்டன்பாக என் அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக; கர்த்தாவே, பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல், நீதியைப் பார்த்தால் யார் நிற்கக்கூடும். 2.மன்னிப்பை எவனானிலும் தன் புண்ணியங்களாலே அடையான்; உம்மை யாவரும் தாழ்வான மனத்தாலே பணிந்து பயப்படவே, மனத்தரிதிரருக்கே மன்னிக்கிறீர், கர்த்தாவே. 3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன், என் புண்ணியம் அவத்தம்; தெய்வன்பையே நான் நம்புவேன்; அதற்கு வாக்குத்தத்தம் மெய்யான வேதவார்த்தையில் உண்டாமே, நான் என்மனத்தில் அதற்குக் காத்திருப்பேன். 4.ராச்சாமங் காப்பவர், எப்போ விடியும் என்பதாக நிற்க, என் மனமே, நீயோ அதிக ஆவலாகக் கர்த்தாவை நோக்கிக்காத்திரு; ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்குக் காத்தே இரு, ரட்சிப்பார். 5.என் பாவம் பெரிதாகிலும் தெய்வன் பதிகமாமே; கேடெத்தனை பெருகியும்; மீட்பதற்கும் பெரிதே, ஆ,இஸ்ரவேலின் பாவங்கள் அதைத்தும் நீக்கும் மீட்குதல் கர்த்தாவினாலே ஆகும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5035
Song ID
thaalvilirunthu-koopidum-song-chords-ppt
Views
0
Downloads
0