Thaevaathi Thaevan Yesuvai Potti தேவாதி தேவன் இயேசுவைப் போற்றி

தேவாதி தேவன் இயேசுவைப் போற்றி
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவாதி தேவன் இயேசுவைப் போற்றி என்றென்றுமாய் வாழ்த்துவோம் அல்லேலூயா அல்லேலூயா (2) காலமெல்லாம் அவரின் பின்னே தொடர்ந்து சென்று பணிகுவோம் துதியினாலே மகிமைப்படுத்தி துதிப்போம் இவரை என்றுமாய் 2. தடைகள் யாவும் நீக்கும் தேவன் பணிந்து இவரைப் போற்றுவோம் தீமை ஒன்றும் அணுகிடாமல் விலக்கி காக்கும் தேவனாம் 3. ஏற்ற வேளை உயர்த்தும் தேவன் அவரின் கரத்தில் அடங்குவோம் தேவ வழியில் சென்று நாமே தேவன் இவரைப் புகழுவோம் 4. மகிமை தேவன் தமது சபையை வானில் சேர்க்க வருகிறார் தூய்மை காத்து ஆயத்தமாக அன்பர் இவரை உயர்த்துவோம் 5. பாதுகாத்த தயவை எண்ணி பாரில் இவரை உயர்த்துவோம் மகிமை நாமம் உடைய தேவன் பூவில் இவரை உயர்த்துவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7325
Song ID
thaevaathi-thaevan-yesuvai-potti-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open