Lyrics
தேவனாம் இயேசுவே உம்மை நான்
ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்
இயேசுவே நீர் எந்தன் பெலனும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்
இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!
1. ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
அற்புதமான உம் திருவசனம்
ஆதரவாய் எங்கள் கரமதிலே - என்றும்
அழியாப் பொக்கிஷமாய் நிலைக்க
2. உலகின் முடிவு பரியந்தமும்
உங்களோடிருப்பேன் என்றவரே
உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
தகுதிப்படுத்தியதால் துதிப்பேன்
3. நன்மையும் கிருபையும் என்னை தொடர
நாதனே நீர் என்னை நடத்திடுமே
ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
ஜீவன் தந்தென்னை மீட்டதினால்
Details
- Numeric ID
- 2547
- Song ID
- thaevanaam-yesuvae-ummai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0