Thalarnthu Pogathae தளர்ந்து போகாதே மகனே

தளர்ந்து போகாதே மகனே
Unknown
PPT
Lyrics

Lyrics

தளர்ந்து போகாதே மகனே துணிந்து போராடு - சோர்ந்து போகாதே மகளே எழுந்து போராடு நானும் உன்னோடு மறந்து போகாதே என் கரமும் உன்னோடு கலங்கிப் போகாதே-சோகச் சுமையும் கடந்தே போகும் துணிந்து போராடு உனது நம்பிக்கை உன்னை மீட்கும் எழுந்து போராடு மகனே துணிந்து போராடு மகளே எழுந்து போராடு 1. அனைத்தையும் புதியன ஆக்குகிறேன் எனவே போராடு வானத்தின் வல்லமை நான் தருவேன் எதிர்த்து போராடு எனது உறைவிடம் உன்னுடன் அன்றோ தொடர்ந்து போராடு காக்கும் கடவுள் நான் தான் அன்றோ நம்பி போராடு 2. சிலுவையின் வழி இது தோல்வியும் அல்ல இணைந்து போராடு துன்பமும் துயரமும் நிரந்தரமல்ல ஜெபித்து போராடு உனக்கு முன்பே செல்வதும் நான் தான் அறிந்து போராடு மாற்றத்தை தருபவர் நானே அன்றோ உணர்ந்து போராடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7286
Song ID
thalarnthu-pogathae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open