Thalimuraiyaai Endrendrumaai தலைமுறையாய் என்றென்றுமாய்
தலைமுறையாய் என்றென்றுமாய்
Lyrics
தலைமுறையாய் என்றென்றுமாய்
தேவன் எம் அடைக்கலமானவரே
தஞ்சம் அவரே திருப்பிடுவோம்
1. பூமி உலகம் உருவாகு முன்னே
ஆமிவர் அநாதி பிதா
நேற்று கழிந்த நாள் போலவர் முன்
நீண்ட ஆயிரம் ஆண்டுகளே
2. காலை முளைத்து பூத்திடும் புல்லே
மாலை நேரம் உலர்ந்திடுதே
வாடும் மனிதர் நாட்கள் மறையும்
வெள்ளம் போல் எம்மை வாரி கொள்வார்
3. உந்தன் முகத்தின் வெளிச்சத்திலே நீர்
எந்தன் பாவம் நிறுத்தினீரே
தேவா கோபத்தால் மாயக்கதை போல்
பாவ வருடங்களை கழித்தோம்
4. எங்கள் வாழ்நாள் எழுபது ஆன்டே
எண்பத்தாண்டோ பெலன் இருந்தால்
ஞான இதயம் தேவ உணர்வும்
நாட்கள் எண்ணிட போதித்திடும்
5. கர்த்தரே நீர் திரும்பியே வாரும்
கோபம் நீங்கி பரிதபியும்
துன்பம் அடைந்த நாட்கள் பதிலாய்
இன்ப மகிழ்ச்சி ஈந்திடுமே
6.உந்தன் கிரியை ஊழியருக்கே தான்
உம் மகிமை பிள்ளைகட்கே
எங்கள் கரத்தின் நற்கிரியைகள்
என்றும் உறுதி செய்தருளும்
Details
- Numeric ID
- 4396
- Song ID
- thalimuraiyaai-endrendrumaai-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open