Thanthai Siru Paalanae Song பாமாலை: 346 தந்தை தன் சிறு பாலனை

தந்தை தன் சிறு பாலனை

Lyrics

1 தந்தை தன் சிறு பாலனை கையேந்தி தாங்குவான்; சீராட்டப் பெற்ற பாலகன் அபாயம் நினையான். 2 அவ்வாறே என்னை, தந்தையே, காப்பாற்றித் தாங்குவீர்; என் பலவீனம் நீங்கவும் கையேந்தி வருவீர். 3 மாதாவின் நேச மடியில் சாய்ந்தாடும் குழந்தை தாயாரின் முகம் பார்க்கையில் மறக்கும் கிலேசத்தை. 4 அவ்வாறே, நேச ரசஷகா உம் அருள் முகத்தை நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர் என் விசுவாசத்தை. 5 தாய் தந்தைப் பக்கம் பாலரை உட்கார வைக்குங்கால், சந்தோஷித்துள்ளம் களிப்பார் பெற்றோரின் அன்பினால். 6 அவ்வாறே திருப்பாதத்தில் ஆனந்தம் அடைந்தேன்; மென்மேலும் அருள் நாதரே பேரன்பை ருசிப்பேன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5042
Song ID
thanthai-siru-paalanae-song-chords-ppt
Views
0
Downloads
0