Thanthanai Thuthipome தந்தானை…

தந்தானைத் துதிப்போமே திருச்
Unknown
Lyrics

Lyrics

தந்தானைத் துதிப்போமே திருச் சபையாரே கவி பாடிப்பாடி தந்தானைத் துதிப்போமே விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக 1. ஒய்யாரத்துச் சீயோனே நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து ஒய்யாரத்துச் சீயோனே ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் 2. கண்ணாரக் களித்தாயே நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து கண்ணாரக் களித்தாயே எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே 3. சுத்தாங்கத்து நற்சபையே உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து சுத்தாங்கத்து நற்சபையே சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின் ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் 4. தூரம் திரிந்த சீயோனே உனைத் தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி தூரம் திரிந்த சீயோனே ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! 5. சிங்காரக் கன்னிமாரே உம் அலங்காரக் கும்மி அடித்துப் படித்து சிங்காரக் கன்னிமாரே மங்காத உம் மணவாளன் இயேசுதனை வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2740
Song ID
thanthanai-thuthipome-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0