Thanthaye Ummidam தந்தையே உம்மிடம்

தந்தையே உம்மிடம்

Lyrics

மனுஷன் தானே நான் மாமிசம் தானே நான் பிறந்ததும் வளர்ந்ததும் பாவத்தில் தானே முயற்சித்தேனே நான் பயிற்சித்தேனே என் உள்ளம் உடல் அனைத்தையும் கட்டிவைத்தேனே ஆனால் பலநேரம் விழுகுறேனே இனி என்னால் முடியாமல் தளர்கிறேனே என்னை எனக்கே பிடிக்கலையே நான் உண்மை சொல்கிறேன் நடிக்கலையே தந்தையே உம்மிடம் என்னிதய இன்னல்களை சொல்லிட வந்தேன் வேதம் வாசித்தேன் நான் வேண்டுதல் செய்தேன் உம் பிரசன்னத்தை மட்டும் தானே நித்தம் தேடினேன் மாம்சம் இழுக்க உந்தன் ஆவி தடுக்க இவ்விரண்டுக்கும் நடுவில் நான் சிக்கி தவித்தேன். எந்தன் மனம் நோக கதறிவிட்டேன் பரிசுத்தம் தினம் வேண்டி பதறிவிட்டேன் ஆவி ஆத்துமாவில் உடைந்துவிட்டேன் என்னை முற்றும் தந்து சரணடைந்துவிட்டேன் பிள்ளையே உன்னிடம் என் கிருபை தருகிறேன் சோர்ந்து போகாதே போராட்டம் தான் இந்த வாழ்க்கை பூமி விட்டு நீ போகும்வரை உலகை நான் வென்றேனே நீயும் வெல்வாயே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8045
Song ID
thanthaye-ummidam-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open