Lyrics
தரி தாழ்மையே தெரிந்து வெறு
தாட்டிகமதை உரிந்து
திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு
செயலதை நீ குறி மனமே அவர்
தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த்
தாழ்ந்திருந்தார் அனுதினமே
மனத்தரித்திரர் தாம் பாக்கியர் எனவே
வாகுடன் அவர் உரைத்தாரே நெஞ்சே
உனக்குள் இத்தகையான நற்குணமே
உண்டோ என் றாய்ந்து நீ பாரே
மேட்டிமை யுடையோர் மீது தற்பரனார்
வெறுப்படைந் தகற்றுவார் உடனே நல்ல
தாட்டிகமதிலாத் தாழ்ந்த சிந்தையினோர்
தமக்கருள் புரிகுவர் திடனே
ஆதியில் தூதர்களில் சிலர் கெர்வம்
அடைந்து நல் வாசமற்றாரே உடன்
தீதறு பேய்களால் எரிநகரில்
சேர்ந்ததி சாபமுற்றாரே
Details
- Numeric ID
- 6072
- Song ID
- thari-thalmaiyae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0