Then inimaiyilum yesuvin naamam PP…

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

Lyrics

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே – அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே – பாவ கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே பாவியை மீட்கத் தாவியே உயிரை தாமே ஈந்தவராம் – பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்’ கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் – நீயும் அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார் ஆசைகொள் நீ மனமே பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம் – அதைப் பூண்டுகொண்டால் தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6200
Song ID
then-inimaiyilum-yesuvin-naamam
Views
0
Downloads
0