Thendungal Kandadiveer Thaeva PP…

தேடுங்கள் கண்டடைவீர்
Unknown
Lyrics

Lyrics

தேடுங்கள் கண்டடைவீர் தேவ தேவனின் தூய திருமுகம் காண தேடிடுவோம் அதிகாலமே 1. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் – எந்த சேதமும் வந்தணுகாமல் இந்தப் புதுதினம் கண்டடைய தந்தனரே தமது கிருபை 2. நல்ல சுகம் பெலன் தந்து – தம் வல்ல நல் ஆவியும் ஈந்து வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார் 3. ஊண் உடை தந்தாதரித்து – இந்த ஊழிய பாதையில் காத்து கூப்பிடும் வேளை செவிகொடுத்து கேட்டிடும் யாவையும் ஈந்தனரே 4. ஜீவனும் உள்ள நாளெல்லாம் – என் தேவனைக் கீர்த்தனம் பண்ணி ஓசையுள்ள கைத்தாளத்தோடே நேசைய்யா இயேசுவை ஸ்தோத்தரிப்போம் 5. காலையில் ஸ்தோத்திரக் கீதம் – இந்த வேளையில் வேதத்தின் தியானம் நல்ஜெப தூபம் எனது இன்பம் நற்கிரியைகளும் செய்துழைப்பேன் 6. கர்த்தரை நான் எப்பொழுதும் – என் கண் முன்னில் நிறுத்தி நோக்க நாள் முழுதும் அவர் பின் நடக்க நேர்வழி பாதை காட்டிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2555
Song ID
thendungal-kandadiveer-thaeva-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0