Thevan Thantha Valvallavaa தேவன் தந்த வாழ்வல்லவா

தேவன் தந்த வாழ்வல்லவா
Unknown
Lyrics

Lyrics

தேவன் தந்த வாழ்வல்லவா அதை வேதனை என்று சொல்லலாமா தேவன் தந்த வாழ்வல்லவா அதை சோதனை என்று பேசலாமா சொல்லலாமா நீங்க சொல்லலாமா பேசலாமா நீங்க பேசலாமா --- தேவன் 1. தேவன் தந்த மனைவியல்லவா அவளை அடிமையாக நடத்தலாமா உன்னை நம்பி வந்த மான் அல்லவா அவளை கசந்து கசந்து திட்டலாமா நடத்தலாமா அப்படி ( நீங்க) நடத்தலாமா திட்டலாமா கசந்து திட்டலாமா --- தேவன் 2. தேவன் தந்த கணவரல்லவா அவரை எதிரியாக நினைக்கலாமா பாசம் நிறைந்த புருஷனல்லவா அவரை எதிர்த்து எதிர்த்து பேசலாமா நினைக்கலாமா அப்படி நினைக்கலாமா பேசலாமா எதிர்த்து பேசலாமா--- தேவன் 3. தேவன் தந்த பிள்ளையல்லவா அவனை நாயைப் போல விரட்டலாமா வாரிசாக வந்த செல்வமல்லவா அவனை பாசமின்றி பார்க்கலாமா விரட்டலாமா பிள்ளையை விரட்டலாமா பார்க்கலாமா இப்படி பார்க்கலாமா --- தேவன் 4. தேவன் தந்த தாய் அல்லவா அவரை தனியே ஒதுக்கி தள்ளலாமா கனத்துக்குரிய தந்தையல்லவா அவரை அற்பமாக எண்ணலாமா தள்ளலாமா ஒதுக்கி தள்ளலாமா எண்ணலாமா அற்பமாய் எண்ணலாமா --- தேவன் 5. தேவன் தந்த அத்தையல்லவா அவளை இடைஞ்சல் என்று வெறுக்கலாமா ஆதரவான மருமகள் அல்லவா அவளை குற்றப்படுத்தி தூற்றலாமா வெறுக்கலாமா அத்தையை (மாமியாரை) வெறுக்கலாமா தூற்றலாமா அவளை (மகளை) தூற்றலாமா --- தேவன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3718
Song ID
thevan-thantha-valvallavaa-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0