Thirumukath Tholivattu திருமுகத் தொளிவற்று

திருமுகத் தொளிவற்று

Lyrics

1. திருமுகத் தொளிவற்று, பெருவினைகளி;ல் உற்றுச் சீர்கெட்ட பாவி ஆனேன், -நான் ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட ஊக்கம் அருள் பரனே. 2. துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல் சோபிதம் தான் இழந்தேன் – பேய்ப் பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப் பாவிக் கிரங் கையனே. 3. பாதகர் மீதில் பரிதபியாமலும் பாவம் பொறாமலும் நீ – சுத்த நீதியை நோக்கில் உனது சமூகத்தில் நிற்பவர் ஆர் துய்யனே? 4. தன் புண்ணியத்தால் எவனும் மன்னிப்புறத் தக்கவன் இல்லை மெய்யாய் – எந்தை ! உன் தயையால் உன் திருச்சுதன் மூலமாய் உண்டு பொறுப் பெனக்கே 5. மண்ணையே நோக்கி உழன்று தவிக்கும் என் வஞ்சக நெஞ்சதனை – நேராய் விண்ணையே நோக்கிடப் பண் இறைவா உனை வேண்டி மன்றாடுகின்றேன். 6. மாறுபாடான இவ் வேழைக்கிரங்கி நீ மன்னிப்பருள் வதன்றி – எனக் காறுதலாக உனது நல் ஆவியை அனுக்கிரகித் தாள் பரனே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5245
Song ID
thirumukath-tholivattu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1