Thiviya Ikkiyathil Nilaipomoyakil திவ்ய ஐக்கியத்தில் நிலைப்போமேயாகில்
திவ்ய ஐக்கியத்தில் நிலைப்போமேயாகில்
Unknown
Lyrics
Lyrics
1. திவ்ய ஐக்கியத்தில்
நிலைப்போமேயாகில்
அருள் ஜோதியிலே நடப்போம்
வல்ல ஆவியினால்
தேவ சித்தஞ்செய்தால்
பெரும் பாக்யம் பெற்றே வாழுவோம்
கீழ்ப்படிவோம்
தேவ சித்தஞ்செய்வோம்
திருவாக்கை எப்போதும்
நம்பிக் கீழ்ப்படிவோம்
2. மேகம் தோன்றுமானால்
அன்பின் சூரியனால்
அது நில்லாமல் மறைந்தே போம்
சோர்வு சந்தேகமும்
அவ நம்பிக்கையும்
அணுகாமலே முன் செல்லுவோம்
3. எந்த வேளையிலும்
இன்ப துன்பத்திலும்
அருள் நாதர் சகாயஞ்செய்வார்
வரும் சோதனையோ
மனோ சஞ்சலமோ
இவை நீக்கியே பாதுகாப்பார்
4. நம்பி கீழ்ப்படிந்தே
திருப்பாதத்திலே
நம்மை முற்றிலும் ஒப்புவிப்போம்
பெரு நன்மை ஈவார்
அபிஷேகஞ்செய்வார் தேவ ஆவியைப்
பெற்றுக் கொள்வோம்
5. கர்த்தரோடின்பமாய்
அந்நியோந்நியமாய்
நீங்காமல் வாசஞ் செய்வோம்
அவர் சொற்படியே
உண்மையோடுடனே
மனோற்சாகமாய்க் கீழ்ப்படிவோம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5856
- Song ID
- thiviya-ikkiyathil-nilaipomoyakil-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0